பரணி நட்சத்திரம் :
பரணி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும். மேஷ ராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன், ராசி அதிபதி செவ்வாய். இதனால் பரணியில் பிறந்தவர்கள் தீவிரம், இச்சை, கவர்ச்சி, கலை, உணர்ச்சி, உற்சாகம் ஆகியவற்றின் கலவையாக வாழ்வை அனுபவிப்பவர்கள்.
பரணி நட்சத்திரத்தின் அடிப்படை அம்சங்கள்
- நட்சத்திர அதிபதி : சுக்கிரன்
- ராசி : மேஷம்
- பஞ்சபூதம் : பூமி
- குணம் : உக்கிரம்
- நட்சத்திர இருப்பிடம் : கிராமம்
- பட்சி (பறவை) : காக்கை
- விலங்கு (யோனி) : ஆண் யானை
- மரம் : பாலில்லாத நெல்லி
- உறுப்புகள் : தலை, மூளை, கண் பகுதி
- மனித கணம்
- பித்த நாடி
பரணி நட்சத்திர பாத பலன்கள்
1ஆம் பாதம்
நல்ல உடல் வலிமை உடையவர்கள். எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர்கள்.
2ஆம் பாதம்
அறிவாளிகள், கல்வியில் சிறந்து விளங்குபவர்கள். ஆராய்ச்சி மற்றும் சிந்தனை திறன் அதிகம்.
3ஆம் பாதம்
மனமகிழ்ச்சி, சமூக உறவுகள், நண்பர்கள் வட்டம் அதிகம். கலை, இசை மீது விருப்பம்.
4ஆம் பாதம்
கோபம் அதிகமாக இருக்கும். அரசுப் பதவி, அதிகாரம், நிர்வாகத் திறன் கிடைக்கும் வாய்ப்பு.
பரணி நட்சத்திர குணாதிசயங்கள்
- அலங்காரம், அழகு, ஆடம்பரம் மீது அதிக விருப்பம்
- கலை, இசை, நடனம், சமையல் கலை ஆகியவற்றில் சிறப்பு
- உணவு பிரியர்கள் – சூடான, சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள்
- இச்சை, கவர்ச்சி, காம உணர்வு அதிகம்
- தைரியமாக, நின்று நிதானமாக பேசும் தன்மை
- பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் மனப்பான்மை
கல்வி, தொழில், வேலை
- சிறு வயதில் சுக்கிரன் திசை வருவதால் படிப்பில் நாட்டம் குறையலாம்
- அடிமைத் தொழில் (Job) இவர்களுக்கு சிறப்பு தரும்
- கூட்டுத் தொழில் பெரும்பாலும் ஒத்துவராது
- செவ்வாய் பலம் பெற்றால் Mechanical / Engineering துறைகள் சிறப்பு
- வங்கி சார்ந்த வேலைகள்
- உணவு, ஹோட்டல், கேட்டரிங் தொழில்
- கலை, இசை, அலங்காரம், அழகு சார்ந்த தொழில்கள்
குடும்பம் & திருமண யோகம்
- தாயின் ஆதிக்கம் அதிகம்
- குடும்பத்தில் திருமண நிலை பாதிப்புகள் காணப்படும்
- 9ஆம் அதிபதி பரணியில் இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம் யோகம்
- 5ஆம் அதிபதி பரணியில் இருந்தால் தாத்தாவிற்கு இரண்டு திருமணம்
- சிலருக்கு குலதெய்வ தோஷம் காணப்படும்
உடல்நலம் & எச்சரிக்கைகள்
- சமையல் செய்யும்போது தீக்காயம், சூடு காயம் ஏற்படும் வாய்ப்பு
- பித்த சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள்
- பயணம் மீது அதிக விருப்பம்
சித்தர் குறிப்புகள் (புலிப்பாணி):
- ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் நோய் ஏற்பட்டால் குணம் கடினம்
- 1ஆம் பாதத்தில் நோய் – 3 நாட்களில் குணம்
- 2ஆம் பாதத்தில் நோய் – 7 நாட்களில் குணம்
- 3ஆம் பாதத்தில் நோய் – 15 நாட்களில் குணம்
ஆன்மிக அம்சங்கள் & பரிகாரங்கள்
- நட்சத்திர தெய்வம் : ஸ்ரீ துர்க்கை அம்மன்
- நெய்வேத்தியம் : வெல்ல அப்பம்
- வேதை நட்சத்திரம் : அனுஷம்
- வழிபட வேண்டிய சித்தர் : போகர் சித்தர்
சிறந்த பரிகாரம்
பரணி நட்சத்திரம் வரும் நாளில்,
- நெல்லி மரம் தலவிருட்சமாக உள்ள ஆலயங்களுக்கு சென்று
- நெல்லி மரத்திற்கு நீர் ஊற்றி
- அதன் அடியில் தியானம் செய்வது
மிகச் சிறந்த பரிகாரமாகும்.
கூடுதல் சிறப்புகள்
- ரோஜா உள்ளிட்ட முட்செடிகள் நடுவதற்கு பரணி நட்சத்திரம் உகந்தது
- நெருப்பு தத்துவம் மேலோங்கும்
- செல்வம் சேர்க்கும் யோகம் உண்டு
- பரணியில் பிறந்த புராண நாயகன் : துரியோதனன்
- சுக்கிரன் திசை காலம் : 20 ஆண்டுகள்
