மந்திர ரகசியம்
ஆதிசித்தர் என்றும், முதல் சித்தர் என்றும்; சித்தர்களுக்கெல்லாம் குரு என்றும் சிவபெருமானை குறிப்பிடுவார்கள்.
சிவபெருமானே பஞ்சாட்சர மந்திங்களையும் கோசபீசம் எனும் மகத்துவம் பொருந்திய அட்சரங்களையும் லக்கங்களையும் அதனை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும் அதன் மகிமைகளையும் உபதேசித்தவர் ஆவார்.
சிவனருளிய பஞ்சாட்சர ரூபத்தை கோபம் உடையவர் களுக்கும் சண்டாளர்களாகிய பாபிகட்கும் மந்திரங்களில் மனம் படியாத காமாதுரர்களுக்கும் ஏமாற்றும் சீடர்களுக்கும் உபதேசிக்ககூடாது என்று அவர் நிபந்தனை விதித்தார்.
சிவபுராணத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை நல்லொழுக்கமும் பரோபகார சிந்தனை உடையவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்று சிவன் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.
பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கும்படி பார்வதி தேவியார்தான் முதன்முதலில் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார்.
மந்திரநெறி மற்றவர்க்கு பயன்படும் வகையில் பொதிகை மலையில் இருக்கும் அகத்திய மாமுனிவருக்கு முதன்முதலில் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார்.
மந்திரநெறி மற்றவர்க்கு பயன்படும் வகையில் பொதிகை மலையில் இருக்கும் அகத்திய மாமுனிவருக்கு முதன் முதலில் சிவபெருமான் உபதேசித்தார் தகுந்தவர் வாயிலாக குரு உபதேசமொழியாக பயிலப்பட்ட மந்திரகாவியத்தை அகத்தியர் ஓலைச்சுவடியில் எழுதி உலக மக்களுக்கு பயன்பட உத்தேசித்தபோது சித்தர்கள் பலரும் ஆட்சேபனை செய்தனர்.
ஆயினும் அகத்தியர் அவர்களின் எதிர்ப்பையும் மீறி எழுதிமுடித்தபோது மந்திர ரகசியங்களை வெளியிட முயன்றமையில், “அவர் இயற்றிய மந்திரக்காவியம் மறைந்தொழியட்டும்” என சித்தர்கள் சாபமிட்டுச் சென்றனர்.
அகத்திய மாமுனிவர் மீண்டும் இறைவனைப் பணிந்து உலகமக்களின் நலன் கருதியே நாம் அவ்வாறு எழுதியதாக விளக்கம் அளிக்க இறைவன் சாபம் போக்கினார்.
சித்தர்கள் சாபத்தினாலோ என்னவோ அகத்தியர் எழுதிய பெருநூல் காவியத்தில் வாதகாவியம், ஞானகாவியம், பூரணகாவியம், மாந்திரீக காவியம், லட்சண காவியம் எனும் ஐந்து காவியங்களில் மாந்திரீக காவியம் மறைக்கப்பட்டு வைத்திய காவியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
சிவபெருமான் திருவாக்கின்படி அகத்தியரது மந்திர காவியம் வாய்மொழியாக வழங்கப்பட்டு ஓலைச்சுவடிகளில் பின்னர் பதிவாகியுள்ளது.
இதுபோலவே கருவூர்ச் சித்தரும் தாம் எழுதிய அட்டமாசித்து மந்திர நூலை உலகுக்கு அறிமுகப்படுத்த முற்பட்ட போதும் இவ்வாறே சித்தர்கள் சாப்ம் ஏற்பட்டு பின்னர் நீங்கிதாகக் கூறப்படுகிறது.
சிவபெருமானின் மந்திர மொழியானது அப்பரம்பொருளை அணுகி அதன் பேராற்றலினைத் தொட்டு பின்னர் அவ்வாற்றிலின் வடிவமாக நம்மை செயல்பட வைக்கின்றது.
இம்மந்திர மொழியினை குருமுகமாகக் கற்க வேண்டும். குருவை இறைவனாகாகக் காண வேண்டுமென்று திருமூலர் கூறுகின்றார். ஆசான் என்பவர் முக்கிய அங்கம் வகிக்கிறார்.
அஞ்ஞானமான இருளை நீக்குபவர் குரு எப்போது நம்மிடமுள்ள அஞ்ஞான இருள் அகல்கிறதோ அப்போது ஞானம் பிரகசிக்கிறது.
குருவே அழியாத மெய்ப்பொருளாகிய இறைவனை அடையும் மார்க்கத்தை உணர்த்தி அரும்பெரும் துணையாய் இருந்து குறிக்கோளை அடையச் செய்கிறார். குரு என்பவர் நெறியைக்காட்டுபவர் என்பதோடு நெறியிலே நம்மை நடத்திச் செல்பவர் என்று பொருளாவார்.
ஒருவன் குருவினைத் தேர்ந்தெடுக்கும் முன்பு மிகவும் ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து மெய்யான குருவினைத் தெரிந்து அதன் பிறகே அவரை ஞானகுரு என்று பற்றிப் பிடிக்க வேண்டும் என சித்தர் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.
மந்திரங்களின் கணக்கீடு பற்றிக் குறிப்பிடும்போது சப்த கோடி மகாமந்திரம் என வடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓரெழுத்தினையுடைய மந்திரங்களை “பிண்டம்” என்றும் ஈறெழுத்தினையுடைய மந்திரங்களை “கர்த்தரீ” என்றும் மூன்றெழுத்து முதல் ஒன்பது எழுத்துவரையுள்ளவை.
” பீசம்” என்றும்.பத்துமுதல் இருபது வரையுள்ளவை “மந்திரம்” என்றும். இருபதுக்கு மேற்பட்டவை “மாலா மந்திரம்” என்றும் வகைப்படுத்தப்படுள்ளன.
